2/3/09

இறை வாழ்த்து

மண்ணாய், மரமாய், ஊனாய், உணவாய், மணமாய்
மலர்ந்த வெளியே வாழி !
ண்ணாய், நீராய், தகதக நெருப்பாய், சுவையாய், பார்வையாய்
படர்ந்த வெளியே வாழி !
விண்ணாய் விரிந்து, காற்றாய் கரைந்து, ஒலியாய் தொட்டு
நின்ற வெளியே வாழி !
கண்ணாய், மனத்தினுள் கருத்துணர்ந்து உள்ளொளியாய்
ஒளிர்ந்து நின்ற வெளியே வாழி !





குரு பூர்ணிமா

குருவே உயர்வாகும் ! குருவே உணர்வாகும் !
குருவே உயிராகும் ! குருவே உலகமுமாகும் !
குருவே அன்பாகும் ! குருவே அறமுமாகும் !
குருவே கருணையாகும் ! குருவே கடவுளாகும் !


குருவே மானுடம் வெல்லவைத்த குருவடி போற்றி நின்றேன்
குருவே குண்டலி குத்தியுனர்த்திட்ட குருவடி போற்றி நின்றேன்
குருவே ஆறாதார உணர் உணர்த்திட்ட குருவடி போற்றி நின்றேன்
குருவே கருவிடைக் கருத்துர்த்திட்ட குருவடி போற்றி நின்றேன்


குரு சரணம்

குருவே சரணம் ! குருவே சரணம் !
குருவடி சரணம் ! குருபாதம் சரணம் !
குரு உரு சரணம் ! குரு சொல் சரணம் !
குரு பார்வை சரணம் ! குரு உணர்வே சரணம் !


உருநாடி குரு நாடி
இட நாடி வட நாடி
நடு நாடி நாட நாடி
உரு நாடி திரு நாடியே


2 comments:

  1. Vaazhga Valamudan
    Guru Vaazhga
    Guruve thunai
    Guruvin thiruvadi potri

    ReplyDelete
  2. Please post more photos of Ayya. Vazhga Valamudan.

    ReplyDelete


Free Blogger Templates by Isnaini Dot Com and Insurance Industry News. Powered by Blogger